தேனியில் சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
தேனியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் புதன்கிழமை பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேனியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் புதன்கிழமை பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தேனி, ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செந்தில்குமார் ஊர்வலத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். தேனி சார்பு நீதிபதி ஜெயராஜ், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் குமரசேன், தேனி வழக்குரைஞர் சங்கத் தலைவர் எம்.முத்துராமலிங்கம், தேனி சிறப்பு அரசு வழக்குரைஞர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியகுளம் சாலையில் உள்ள பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது. தேனியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சட்ட விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் கொண்ட பதாகை ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகளை ஆணைக் குழு நிர்வாக உதவியாளர் ஆறுமுகம் செய்திருந்தார்.