தேனி

தேனியில் அரசுத் துறை  ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

தேனியில் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பழனி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் துரைராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலர் முகமது அலி ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊதியக் குழு பரிந்துரைகளை அரசு வெளியிட வேண்டும். 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2017 செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 21 மாதங்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 வழங்க வேண்டும். மாதாந்திர மருத்துவப் படி ரூ.1,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT