தேனி

கூடலூர் பகுதியில் போதை பாக்குகள் விற்கப்படுவதாக புகார்

DIN

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்குகள் விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், சைனிகைனி, கூல்லிப், கணேஷ், ஹான்ஸ் உள்ளிட்ட போதை பாக்குகள் இப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தாராளமாக விற்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கோயில், பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் இவை அதிம் விற்பனையாகின்றன. ஒரு புகையிலையின் விலை ரூ.10 என்றால்  தடை செய்யப்பட்ட பிறகு அதன் விலை ரூ. 20 முதல் ரூ. 25 வரை  விற்பனை செய்கின்றனர்.  மேலும் இவை கேரளாவுக்கும் இங்கிருந்து அனுப்பப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இவற்றை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்தி வருவதாகவும், எனவே இவற்றை  மாவட்ட,  நகர உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT