தேனி

கூடலூரில் மந்தையம்மன் கோயில் திருவிழா

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள மந்தையம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
 முதல் நாள் அம்மனுக்கு கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இரண்டாம் நாள் வியழக்கிழமை அம்மன் கரகத்துடன்,  பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து குளத்தில் கரைத்தனர். இரண்டு நாள் விழாவிலும் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.  மேலும் சிறுவர், சிறுமியர்களுக்கான ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவுக்கான ஏற்பாடுகளை மேலக்கூடலூர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT