கூடலூரில் ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகள் தொடங்கியது
தேனிமாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் கூடலூரில் ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகள் திங்கள் கிழமை முதல் தொடங்கியது.
தேனிமாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் கூடலூரில் ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகள் திங்கள் கிழமை முதல் தொடங்கியது.
கூடலூரில் ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகள் திங்கள் கிழமை முதல் தொடங்கியது. தேனிமாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் கூடலூரில் உள்ள ஒட்டான்குளம் தூர்வாரும் பணிகளை, பூமி பூஜை செய்து கம்பம் பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பினர் தொடங்கி வைத்தனர்.
குளத்தில் உள்ள மண் மற்றும் களிமண்களை விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் போன்ற வற்றை விண்ணப்பத்துடன் இணைத்து இலவசமாகவே எடுத்துக்கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வணிக நோக்கில் மண் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 500 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசனம் பெறும் அளவில் அமைந்துள்ள ஒட்டான்குளம் சுமார் 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே குளத்தில் தண்ணீரின், கொள்ளளவு அதிகரிக்கும் என்றும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.