ஆடுகள் திருட்டு: 3 பேர் கைது
ஆண்டிபட்டி போலீஸார் சனிக்கிழமை இரவு அங்குள்ள சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
ஆண்டிபட்டி போலீஸார் சனிக்கிழமை இரவு அங்குள்ள சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வேனில் 3 பேர் ஆடுகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது உசிலம்பட்டி அருகே மானூத்து என்ற இடத்தில் 5 ஆடுகளை திருடி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து குள்ளப்பக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த சந்திரன் (31), மின்னல் ரவி (30) மற்றும் விஜயக்குமார் (28) ஆகியோரை கைது செய்தனர்.