முகப்பு
தேனி

பழக்கடை  வியாபாரிகளிடையே தகராறு: ஒருவருக்கு அரிவாள் வெட்டு

தேனியில் பழக்கடை வியாபாரிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை அரிவாளால் வெட்டியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

தேனியில் பழக்கடை வியாபாரிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை அரிவாளால் வெட்டியவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
   தேனி நகராட்சி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் பழக்கடை நடத்தி வருபவர்கள் தேனி, பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த அப்துல்லா (50), அரண்மனைப்புதூரைச் சேர்ந்த அன்னப்பராஜா(50). இவர்களுக்குள் வியாபாரம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அப்துல்லா, அன்னப்பராஜாவை அரிவாளால் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னப்பராஜாவின் மனைவி ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில் தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து அப்துல்லாவை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →