முகப்பு
தேனி

கம்பம்  ஒன்றியப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரம்

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  அடிப்படை வசதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:50 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  அடிப்படை வசதியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
     கம்பம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள பல ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், மாவட்டக் காவல் துறை நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு தனித்தனியாக போலீஸ்காரர்களை கிராமக் காவலர்களாக நியமித்தது. அவர்கள், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர்களிடம் தகவல்களை தெரிவித்தனர்.
     அதனடிப்படையில், குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் உள்ள இந்திரா நகரில் குடியிருப்பு பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஊராட்சிப் பணியாளர்கள் மேல்நிலை குடிநீர்த் தொட்டியை பராமரித்து, குடிநீர் செல்ல குழாய்களை பதித்து, வீட்டு இணைப்பு மற்றும் தெரு குழாய்களுக்கு குடிநீர் விநியோகித்ததால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
     ஆங்கூர்பாளையம் ஊராட்சியில் நீண்ட நாள்களாக சரிசெய்யப்படாத தெருவிளக்கு கம்பங்களில் இணைப்புகள் சரி செய்யப்பட்டு, புதிய மின் விளக்குகளும் பொருத்தப்பட்டன. மேலும், சில பகுதிகளில் நீண்ட காலமாக தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன. குழாய்கள் சீரமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
    நாராயணத்தேவன்பட்டி-சுருளி அருவி செல்லும் நெடுஞ்சாலையில் சாக்கடை கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. நெடுஞ்சாலைத் துறை சார்பில். சாலையின் ஓரத்திலுள்ள மழைநீர் வடிகால் தூர்வாரப்பட்டு, கழிவு நீர் செல்லும் வகையில் சரிசெய்யப்பட்டது. 
     கம்பம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.