தெரு விளக்குகளை பராமரிக்க கோரிக்கை
ஆண்டிபட்டியில் தெரு விளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டியில் தெரு விளக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி பேரூராட்சிக்குள்பட்ட காமராஜர் நகர், ரயில்வே பீடர் சாலை, நாடார் தெரு, பாப்பம்மாள்புரம், சக்கம்பட்டி, குமராபுரம், சீனிவாசா நகர் ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் ஆங்காங்கே பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். இதைப் பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. காமராஜர்நகர் பகுதியில் தெரு விளக்கு உடைந்து மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, தெரு விளக்குகளை சரிசெய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.