முகப்பு
தேனி

தேனி அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியை பழுது நீக்க கோரிக்கை

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல மாதங்களாக குடிநீர் சுத்திகரிப்பு கருவி செயல்படாமல் உள்ளதால், பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Updated On : 9 ஜூலை, 2018 at 7:48 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல மாதங்களாக குடிநீர் சுத்திகரிப்பு கருவி செயல்படாமல் உள்ளதால், பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. 
       தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 900 படுக்கை வசதிகள் உள்ளன. இங்கு, தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலிருந்தும் ஏராளமானோர் வந்து தங்கி சிகிச்சை பெறுகின்றனர். மேலும், தினமும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.       இந்நிலையில், இம்மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஏற்றாற்போல் குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று புகார் கூறப்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. 
எனவே, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக ஆழ்துளைக் கிணறுகளும் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், தற்போது இதிலிருந்தும் தண்ணீர் கிடைக்காததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 
  சில ஆண்டுகளுக்கு முன், மருத்துவமனையின் அவசர சிகிச்சை மையத்துக்கு முன்பாக சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், இது சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதன்பின்னர், குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுதாகி, இன்று வரை பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது.
    இதனால் குடிநீர் கிடைக்காமல், நோயாளிகள் கடைகளில் தண்ணீர் பாட்டில் வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, குடிநீர் சுத்திகரிப்பு கருவியை பழுது நீக்கி, நோயாளிகளுக்கு சீராக சுத்தமான குடிநீர் கிடைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.