பெரியகுளம் கௌமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்
பெரியகுளம் கௌமாரியம்மன் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
பெரியகுளம் கௌமாரியம்மன் திருக்கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
இவ்விழாவினை முன்னிட்டு கடந்த ஜூலை 3 ஆம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் கோயில் எதிரேயுள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. அதன் கொடிகம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் வர்த்தக சங்க பிரமுகர் பி.சி.சிதம்பரசூரியவேலு, பல் மருத்துவர் கணேஷ் ,சிவா ஸ்டிடுயோ அய்யாச்சாமி, அதிமுக நிர்வாகி விடிஎஸ்.ராஜவேலு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவினை முன்னிட்டு ஜூலை 9 ம் தேதி முதல் தினமும் மாலை 7 மணியளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகர்வலம் வரும் நிகழ்சி நடைபெறுகிறது. மேலும் ஜூலை 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், ஜூலை 18 ஆம் தேதி அக்னிச் சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.