வீரபாண்டியில் பெண் காவலர்களை தாக்கியவர் கைது
வீரபாண்டியில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை தாக்கியதாக ஒருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
வீரபாண்டியில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களை தாக்கியதாக ஒருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
வீரபாண்டியில், சித்திரை திருவிழாவையொட்டி கௌமாரியம்மன் கோயில் தெற்கு வாசல் பகுதியில் வருஷநாடு காவல் நிலைய தலைமைக் காவலர் ஜெய்சங்கர், காவலர்கள் ராதிகா, ஜெயலட்சுமி ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
அப்போது, முத்துத்தேவன்பட்டியைச் சேர்ந்த பழனி மகன் ஈஸ்வரன் (31), தேனி, பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மனைவி நல்லம்மாள், மகள் சுகன்யா ஆகியோர் அனுமதி மறுக்கப்பட்ட பாதை வழியாக கோயிலுக்குள் செல்ல முயன்றதை தடுத்ததற்காக தன்னையும், பெண் காவலர்கள் ராதிகா, ஜெயலட்சுமி ஆகியோரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தலைமைக் காவலர் ஜெய்சங்கர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் ஈஸ்வரன், நல்லம்மாள், சுகன்யா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, ஈஸ்வரனை கைது செய்தனர்.