தேனி

பெரியகுளம் அருகே கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு 13 ஏக்கர் நிலம் தேர்வு: நடப்பாண்டில் வகுப்புகள் தொடங்கத் திட்டம்

DIN

பெரியகுளம் வட்டம் வடவீரநாயக்கன்பட்டியில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்காக 13 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் தற்காலிக கட்டடத்தில் வகுப்புகள் தொடங்க மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இடம் தேர்வு: இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு இடம் தேர்வு செய்யுமாறு வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டது. கடந்த ஓராண்டாக பல்வேறு இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் பெரியகுளம் வட்டத்திற்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள பின்னத்தேவன்பட்டியில் 13 ஏக்கர் நிலம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டு: மேலும் நடப்பு கல்வி ஆண்டில் (2018-19) 15 அறைகள் கொண்ட தற்காலிக கட்டடத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை தொடங்க மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். அங்கு 7 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால், தற்காலிகமாக பள்ளி நடத்துவதற்கு மாற்று இடத்தை தேர்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி: இந்த பள்ளிக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதனால் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய ஊர்களுக்கு மையப்பகுதியில் பள்ளி அமைய உள்ளதால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருவதால், வரும் கல்வியாண்டில் வகுப்புகள் தொடங்குவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT