தேனி

கம்பத்தில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

DIN


தேனி மாவட்டம், கம்பத்தில் 2.250 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்த இளைஞரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கம்பம்-கோம்பை சாலையில் உள்ள நாக கன்னியம்மன் கோயில் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக, கம்பம் வடக்குக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோம்பை சாலையில் சிறப்பு சார்பு-ஆய்வாளர் பழனிவேல் தலைமையில், போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படியாக இளைஞர் ஒருவர் கையில் பையுடன் சென்று கொண்டிருந்தார். அவரை நிறுத்தி சோதனையிட்டதில், பையில் 2.250 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் காசிராஜன் (28) எனத் தெரியவந்தது. இது குறித்து கம்பம் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து காசிராஜனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT