தேனி

தேனி அருகே கோவிந்தநகரத்தில் பசுமை வீடு கட்டுவதற்கு மானியம் வழங்கக் கோரிக்கை

DIN

தேனி ஊராட்சி ஒன்றியம், கோவிந்தநகரம் ஊராட்சியில் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு அரசு சார்பில் பசுமை வீடுகள் கட்டுவதற்கு மானியம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோவிந்தநகரத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்: கோவிந்தநகரத்தில் 300-க்கும் மேற்பட்ட அருந்தியர் குடும்பங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதில், பெரும்பாலானோருக்கு அதே ஊரில் சொந்தமாக வீட்டு மனையிடம் உள்ளது. இந்த வீட்டு மனையிடத்தில் அரசு சார்பில் பசுமை வீடுகள் கட்டித் தருவதற்கு மானியம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.
கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கொடுவிலார்பட்டியில் அருந்ததியர் சமுதாயத்தினர் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை ஆக்கிரமித்து குப்பைகள் கொட்டி வைக்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT