தேனி

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தைகள் நடமாட்டம்: கண்காணிப்பு கேமராவில் பதிவு

DIN


தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி, மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியில் புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தைகள் நடமாட்டம் வனத்துறையினரின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உள்பட்ட மேகமலை வன உயிரின சரணாலய பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன், புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. புலிகளின் எச்சம், கால்தடம், கண்ணால் பார்ப்பது போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மேகமலை வன உயிரின சரணாலய வனப்பகுதியான சந்தனக்காவு, வெள்ளிமலை உள்ளிட்ட வருசநாடு வனப்பகுதிகளில் புலிகளின் கால் தடம், எச்சம் இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து, அப்பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. கடந்த 25 நாள்களில் வருசநாடு, மேகமலை, சந்தனக்காவு, வெள்ளிமலை வனப்பகுதிகளில் புலிகள், சிறுத்தைகள், கருஞ்சிறுத்தை போன்ற விலங்குகளின் நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT