பெரியகுளம் பகுதியில் மூலிகை சேகரித்து வருவாய் ஈட்டும் கிராமப் பெண்கள்
பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதிகளவு மூலிகை செடிகள் வளர்ந்துள்ளன.
பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதிகளவு மூலிகை செடிகள் வளர்ந்துள்ளன. இப்பகுதி கிராம பெண்கள் தினமும் இவற்றை சேகரித்து, வருவாய் ஈட்டி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை,சோத்துப்பாறை மற்றும் விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் கருப்பு காணம், குண்டு மணி, பப்படை என பல்வேறு அரிய மூலிகை வகைகள் விளைந்துள்ளன. இதனை இப்பகுதி பெண்கள் சேகரித்து அதனை விற்று வருவாய் ஈட்டி வருகின்றனர். பெரியகுளம் பகுதியில் தற்போது சிறிய நங்கை என்னும் மூலிகை அதிகளவு வளர்ந்துள்ளது. இந்த மூலிகை செடிகளை கிராமப்புற பெண்கள் சேகரித்து அதனை காயவைத்து தேனி மற்றும் ஆண்டிபட்டியில் உள்ள மூலிகை விற்பனை கடைகளில் விற்று வருகின்றனர்.
இது குறித்து பெரியகுளத்தை சேர்ந்த பாப்பாத்தி கூறியது:
பெரியகுளம் பகுதியில் தற்போது மழை பெய்துள்ளதால் சிறிய நங்கை அதிகளவு வளர்ந்துள்ளது. இதனை சேகரித்து காயவைத்து விற்பனை செய்து வருகிறோம். ஒருகிலோ சிறிய நங்கை இலை ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 200 வரை வருமானம் கிடைக்கிறது என்றார்.