தேனி

தேனியில் நடைபாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

தேனி, நேருசிலை அருகே நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பில் உள்ள நடைபாதையை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தேனி, நேரு சிலை அருகே நகராட்சி பழைய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், பெரியகுளம், மதுரை நெடுஞ்சாலைகளில் பல லட்சம் ரூபாய் செலவில் நடைபாதையில் டைல்ஸ் கற்கள் அமைக்கப்பட்டன. 
இந்நிலையில், நடைபாதையில் ஆங்காங்கே கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், நடைபாதையில், டைல்ஸ் கற்கள் பெயர்ந்தும், சேதமடைந்தும் உள்ளது. இதனால், பாதசாரிகள் 
நடந்து செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், நடைபாதை அருகே உள்ள மழைநீர் வடிகால், சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் நடைபாதையில் வழிந்தோடுகிறது. இதனால், நடந்து செல்வோர் நடைபாதையில் 
செல்லாமல் சாலையில் இறங்கி செல்வதால் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்கவும், பெரியகுளம், மதுரை நெடுஞ்சாலையில் நடைபாதையை விரிவாக்கம் செய்யவும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT