தேனி

தேனி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் பணிக்கால விவரம் சேகரிப்பு

DIN

தேனி மாவட்டத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் பணிக்கால விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதையொட்டி, மாவட்ட அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் காவல்நிலையங்களில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றுவோர் மற்றும் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்கள் விவரங்களை தெரிவிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
இதன்படி, மாவட்ட அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் 
காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் காவலர்களின் பணிக்கால விவரத்தை மாவட்ட தேர்தல் பிரிவு சேகரித்து வருகிறது.
தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், காவல்துறையினர், சொந்த மாவட்டத்தில் பணியாற்றி வரும் அரசுத்துறை அலுவலர்களை பணியிட மாற்றம் 
செய்வதற்காக, இந்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT