தேனி

கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ 3.80 லட்சம் பறிமுதல்

கேரளத்திலிருந்து தேனி மாவட்டம் கம்பத்துக்கு ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை கைப்பற்றினர். 

DIN

கேரளத்திலிருந்து தேனி மாவட்டம் கம்பத்துக்கு ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை கைப்பற்றினர். 
தேனி மாவட்டம் கம்பம் கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் நீலாம்பூர் அருகே உள்ள பள்ளி பாடச்சிறா பகுதியைச் சேர்ந்த பிரசாத்குமார் மனைவி பிரபா ஆப்ரஹாம் (39) ஆகியோர் காரில் வந்தனர். அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்த போது அதில் ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் வைத்திருந்தது தெரிய வந்தது. பறக்கும் படை அதிகாரிகள் அவரிடம் கேட்ட போது முறையான ஆவணங்கள் இல்லை என்றார். பின்னர் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, உத்தமபாளையம் கருவூலகத்தில் செலுத்தி, ஆவணங்கள் கொண்டு வந்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு கூறினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT