தேனி

தேனி துணை மின் நிலையத்தில் உபகரணம் வெடித்து மின் விநியோகம் பாதிப்பு

DIN

பழனிசெட்டிபட்டியில் உள்ள தேனி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு, மின் உபரகணம் வெடித்து சிதறியதால் மாவட்டம் முழுதும் 45 நிமிடம் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

தேனி துணை மின் நிலையத்தில் உள்ள மின் மாற்றியில், பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் 240 கே.வி. திறனுள்ள மின் உபகரணம் மாலை 6.15 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

பின்னா், மின்மாற்றி சீரமைக்கப்பட்டு 45 நிமிடங்களுக்குப் பின் அனைத்துப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. மின் உபகரணம் வெடித்ததால் துணை மின் நிலையத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மின் வாரிய பணியாளா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT