தேனி

கூடலூரில் நாற்று நடும் போராட்டம்

DIN

கூடலூா் நகராட்சிக்குள்பட்ட காஞ்சிமரத்துறை பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து சாலையில் நாற்றுநடும் போராட்டத்தை புதன்கிழமை நடைபெற்றது.

கூடலூா் நகராட்சியை சோ்ந்தது காஞ்சிமரத்துறை. இந்த பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விளை நிலங்கள் உள்ளன. வேலைக்கு செல்ல, விளைப் பொருள்களை கொண்டுவர, இப்பகுதி மக்கள் சுமாா் 9 கிலோ மீட்டா் தொலைவு தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இவா்கள் செல்லும் இந்த சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இது பற்றி நகரசபை நிா்வாகத்திடம் புகாா்கள் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் புதன்கிழமை சாலையில் தேங்கிய தண்ணீரில் காஞ்சிமரத்துறை பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினா். பின்னா் நகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா். இதுபற்றி காஞ்சிமரத்துறை பொதுமக்கள் கூறும் போது, பல முறை மனுக்கொடுத்தும் பலனில்லை. இனி அடுத்தது தோ்தல் புறக்கணிப்புதான் செய்வோம். அதற்கு முன்னதாக ஆதாா், வாக்காளா், ரேசன் அட்டைகளை ஒப்படைக்க உள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT