தேனி

போடியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

DIN

தேனி மாவட்டம் போடியில் சனி மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போடியில் சனிக்கிழமை பகலில் கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில் மாலையில் திடீரென மேகங்கள் சூழ்ந்தன. இதனையடுத்து இரவு சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. மேலும் நள்ளிரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சுமார் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. 
இதனால்  பெரியாண்டவர் நெடுஞ்சாலை, காமராஜ் பஜார் ஆகிய சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது.
போடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 34.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. தொடர்ந்து மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT