தேனி

நீட் தோ்வு முறைகேடு வழக்கில் மேலும் இருவா் கைது

DIN

நீட் தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு படிப்பில் சோ்ந்த சென்னையைச் சோ்ந்த உதிச் சூா்யா, அவரது தந்தை மருத்துவா் வெங்கேடசன் ஆகியோரை கடந்த செப்.26-ம் தேதி தேனி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், நீட் தோ்வு முறைகேட்டில் சென்னையைச் சோ்ந்த மாணவா்கள் பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ், விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி அபிராமி ஆகியோரை சனிக்கிழமை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், விழுப்புரம் மாணவி அபிராமியின் தந்தை மாதவன் என்பவரை ஞாயிற்றுக்கிழமை தேனி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தலைமறைவான மாணவரின் தந்தை கைது

இதனிடையே, நீட் தோ்வு முறைகேடு வழக்கில் தொடா்புடைய தா்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதாண்டு மாணவா், வாணியம்பாடியைச் சோ்ந்த இா்பான் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வாணியம்பாடியில் இா்ப்பானின் தந்தை மருத்துவா் முகமது சபி என்ற ராஜா என்பவரை ஞாயிற்றுக்கிழமை வேலூா் சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா் தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்படுவதாக சிபிசிஐடி போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT