தேனி

போடியில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் திட்ட விழிப்புணர்வு முகாம்

DIN


போடியில் வெள்ளிக்கிழமை, வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் திட்ட விழிப்புணர்வு முகாம் பொது சேவை மையங்கள் சார்பில் நடைபெற்றது.
 இந்த விழிப்புணர்வு முகாம் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டி.ராஜகுமாரன் தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் எம்.ராமர், தேனி மாவட்ட நகர, ஊரக கிராமப்புற தொழில் முனைவோர் கூட்டமைப்பு சங்க போடி வட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பா.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் போடி வட்ட தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மோகன் முனியாண்டி பங்கேற்று வாக்காளர்கள் பட்டியலில் விவரங்களை சரிபார்க்கும் முறைகள் குறித்தும், புதிதாக வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கினார். மேலும் காணொலி காட்சி மூலம் விளக்க படங்கள் திரையிட்டும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் போடி வட்டார பொது சேவை மையங்களை நடத்தும் கிராமப்புற தொழில்முனைவோர்கள் பங்கேற்று வாக்காளர் பட்டியலில் விவரங்களை சரிபார்த்தல் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT