தமிழக டிப்பர் லாரி மீது கேரளத்தில் கல்வீச்சு: நடவடிக்கை எடுக்கக்கோரி வேலைநிறுத்தம்
தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு சென்ற டிப்பர் லாரி மீது தாக்குதல் நடத்தியதால் தமிழக எல்லையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு சென்ற டிப்பர் லாரி மீது தாக்குதல் நடத்தியதால் தமிழக எல்லையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு பாறை கற்கள், பாறை பொடி போன்றவை நாள்தோறும் 50க்கும் மேலான டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த வாரம் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு சென்ற போது அணைக்கரை அருகே டிப்பர் லாரி மீது சில மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்து உள்ளனர்.
இதுதொடர்பாக கட்டப்பனை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கை இல்லை. இதனால் தமிழக டிப்பர் லாரியை கேரளத்தில் கல்வீசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கம்பம் மெட்டு மலையடிவாரத்தில் தேனி மாவட்ட டிப்பர் லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நிர்வாகி ஏ.காஜாமைதீன் என்பவர் கூறும்போது, தமிழக டிப்பர் லாரியை கேரளத்தில் தாக்கியவர்கள் மீது காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்.