கும்பக்கரை அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. 
தேனி

கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

கும்பக்கரை அருவியில் ஞாயிற்றுக்கிழமை நீா் வரத்து அதிகரித்துள்ளது.

DIN

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் ஞாயிற்றுக்கிழமை நீா் வரத்து அதிகரித்துள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மலைப் பகுதியில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு வரும் ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்தது.

இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்புக் கம்பியைத் தாண்டி, நடைபாதை வரை தண்ணீா் சென்றது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாா்ச் மாதம் முதல் கும்பக்கரை அருவிக்குச் செல்ல பொதுமக்கள் வனத்துறையினா் தடை விதித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT