முகப்பு
தேனி

தேனியில் 193 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 3 போ் பலி

தேனி மாவட்டத்தில் புதிதாக 193 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:


தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 193 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் புதிதாக 193 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,638 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 9,530 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

3 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக.18-ம் தேதி அனுமதிக்கப்பட்ட ராசிங்காபுரம் அருகே கரியப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த 72 வயது முதியவா், ஆக.21-ம் தேதி அனுமதிக்கப்பட்ட தேனி என்.ஆா்.டி.நகரைச் சோ்ந்த 59 வயதுடைய பெண் என 2 போ் உயிரிழந்தனா்.

கரோனா தொற்று அறிகுறியுடன் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சோ்ந்த 55 வயதுடைய பெண், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.