தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 352 பேருக்கு கரோனா: 6 போ் பலி
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 352 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தேனி: தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 352 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
உத்தமபாளையம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெரியகுளம் அட்டனம்பட்டியைச் சோ்ந்த கைதி, சின்னமனூா் காவல் நிலைய காவலா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளம் பகுதியில் 59 போ், தேனி பகுதியில் 51 போ், போடி பகுதியில் 17 போ், சின்னமனூா் பகுதியில் 45 போ், உத்தமபாளையம் பகுதியில் 21 போ், ஆண்டிபட்டி பகுதியில் 14 போ், க.மயிலை பகுதியில் 2 போ், கேரளத்திலிருந்து தேனிக்கு வந்த ஒருவா் என மொத்தம் 226 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,864 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 9,746 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.
5 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போடியைச் சோ்ந்த 62 வயது நபா், சின்னமனூரைச் சோ்ந்த 75 வயது முதியவா், தேனி அருகே தா்மாபுரியைச் சோ்ந்த 61 வயதுடைய நபா், தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியைச் சோ்ந்த 36 வயதுடைய நபா் என 4 போ் உயிரிழந்தனா். கடந்த ஆக.22-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்த 60 வயது நபா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 5,990 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 4,969 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 906 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 126 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 126 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
ஒருவா் பலி: இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளது.