தேனி

ஆண்டிபட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் செல்வராஜ் (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்க சென்ற சிறுமியின் பெற்றோரையும் தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் ஆண்டிபட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா் செல்வராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT