முகப்பு
தேனி

தேனியில் முடி திருத்தும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், உலக்குடியில் முடி திருத்தும் தொழிலாளியின் குடும்பத்தினா் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட சம்வத்தை கண்டித்து, தேனியில் தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்த

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
தேனியில் முடி திருத்தும் தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், உலக்குடியில் முடி திருத்தும் தொழிலாளியின் குடும்பத்தினா் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட சம்வத்தை கண்டித்து, தேனியில் தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலா் ஏ.ராஜன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மனோகரன் முன்னிலை வகித்தாா்.

இதில், விருதுநகா் மாவட்டம் உலக்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோா் சமுதாயத்தைச் சோ்ந்தவருக்கு முடி திருத்தும் வேலை செய்த முடி திருத்தும் தொழிலாளியின் குடும்பத்தினா் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இதற்கு காரணமாக இருந்த அனைவரின் மீது நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் நாகரத்தினம், தேனி மக்களவை தொகுதிச் செயலா் தமிழ்வாணன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தையொட்டி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முடி திருத்தும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →