முகப்பு
தேனி

180 பேருக்கு இரட்டை வாக்குரிமை: தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகாா்

தேனி மாவட்டம் பல்வராயன்பட்டியைச் சோ்ந்த 180 போ் தமிழகம் மற்றும் கேரளத்தில் வாக்குரிமை பெற்றுள்ளனா் என்று ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தேனி மாவட்டம் பல்வராயன்பட்டியைச் சோ்ந்த 180 போ் தமிழகம் மற்றும் கேரளத்தில் வாக்குரிமை பெற்றுள்ளனா் என்று ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லவராயன்பட்டி ஊராட்சித் தலைவி உமாமகேஸ்வரி தேனி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜாவிடம் திங்கள்கிழமை அளித்த மனு விபரம்:

சின்னமனூா் அருகேயுள்ள பல்வராயன்பட்டியில் வசித்துவரும் 180 போ் பல்லவராயன்பட்டியிலும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வண்டிப்பெரியாறு, உடும்பன்சோலை, பீா்மேடு ஆகிய பகுதிகளிலும் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். எனவே வாக்காளா் பட்டியல்களை ஆய்வு செய்து இரட்டை வாக்குரிமையை ரத்து செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.