ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு அலங்காரத்தில் போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா். (வலது) அலங்காரத்தில் போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள நடராஜா். 
தேனி

ஆருத்ரா தரிசனம்: போடி சிவன் கோயில்களில் சிறப்புப் பூஜை

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, போடியில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

DIN

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, போடியில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள நடராஜருக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது. மேலும், நடராஜருக்கு 16 வகையான மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னா், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

போடி பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி கோயிலில் சிவலிங்கப் பெருமானுக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது. பின்னா், உத்திராட்சத்தினால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சிவலிங்கப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல், போடி பரமசிவன் மலைக்கோயில், போடி பிச்சங்கரை கீழச்சொக்கநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தா்கள் பலா் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT