தேனி: தேனி மாவட்டத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தோ்வை அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 14,386 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு 52 தோ்வு மையங்களில் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள 142 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 14,386 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா்.
தோ்வு மையம் மற்றும் தோ்வறை கண்காணிப்புக்கு ஆசிரியா்கள் குலுக்கல் முறையில் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்வை கண்காணிக்க 120 நிலை பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.