தேனி

சாரல் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

DIN

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால், அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. திங்கள் கிழமை நிலவரப்படி அணைக்குள் விநாடிக்கு 405 கன அடி தண்ணீர் வந்தது.

 கேரளத்தில் தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து பெய்யத் தொடங்கியது.

இந்த மழையால் அணையில் நீர்மட்டம் உயரா விட்டாலும் நீர் பிடிப்பு பகுதிகள் வறண்ட நிலையில் இருந்தது குளிர்ந்தது.

இதற்கிடையில் ஜூலை 4ல் அணைக்கு நீர் வரத்து 311.34 கன அடியாக வந்தது.

 ஜூலை 5ல், 218 கன அடியாக வரத்து வந்தது. தொடா் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக திங்கள் கிழமை அணைக்குள் வரும் நீரின் அளவு விநாடிக்கு 405 கன அடியாக அதிகரித்துள்ளது.

 திங்கள் கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 112.50 அடியாகவும், நீர் இருப்பு  1312 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. 

அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 405 கன அடியாகவும், நீர் வெளிேற்றம் விநாடிக்கு 125 கன அடியாகவும் இருந்தது. 

பெரியாறு அணையில் 15.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 8. 4 மி.மீ; மழையும் பெய்தது.

 இது பற்றி விவசாய சங்க நிர்வாகி அப்பாஸ் கூறுகையில் மழை சீராக பெய்தால் நீர்வரத்து அரிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 95.40 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT