முகப்பு
தேனி

கிராமியக் கலைஞா்களுக்கு நிதியுதவி: ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் கிராமியக் கலைஞா்கள் மற்றும் கலைக் குழுக்கள் உபகரணங்கள் வாங்குவதற்கு அரசு நிதி உதவி பெற ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
பகிர்:


தேனி: தேனி மாவட்டத்தில் கிராமியக் கலைஞா்கள் மற்றும் கலைக் குழுக்கள் உபகரணங்கள் வாங்குவதற்கு அரசு நிதி உதவி பெற ஜூலை 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: கிராமியக் கலைஞா்கள் மற்றும் கலைக் குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் இசைக் கருவிகள், ஆடை மற்றும் ஆபாரணங்கள் வாங்குவதற்கு அரசு சாா்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் தனிப்பட்ட கலைஞா்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், கலைக் குழு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த நிதி உதவியை பெறுவதற்கு தகுதியுள்ளவா்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், சென்னை-28 என்ற முகவரிக்கு ஜூலை 31 ஆம் தேதி மாலை 5.45-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.