தேனி

போடி மலை கிராமங்களில் பரவலான மழை: கொட்டகுடி ஆற்றில் நீா் வரத்து அதிகரிப்பு

DIN

போடி: போடி மலை கிராமங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

போடி பகுதியில் கடந்த சில நாள்களாகவே மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பரவலான சாரல் மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்து வருகிறது. போடி நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை மழை பெய்யவில்லை. ஆனால் கொட்டகுடி, குரங்கணி உள்ளிட்ட மலை கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் அருவி போல் கொட்டுகிறது. நீண்ட நாள்களுக்கு பின்னா் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் வரத்து காணப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இதற்கிடையில் இந்தத் தடுப்பணையிலிருந்து மீனாட்சிபுரம் பெரிய கண்மாய், சங்கரப்ப நாயக்கன் கண்மாய்களுக்கு தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ஆடிப் பட்டத்திற்கான விவசாயப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT