தேனி

சுய தொழில் தொடங்குவற்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தேனி: தேனி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், வங்கிக் கடன் மற்றும் அரசு மானிய உதவி பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

வேலை வாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்குவதற்கு ரூ.10 லட்சம் வரையும், சேவை நிறுவனங்கள் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரையும் வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், மாவட்ட தொழில் மையம் மூலம் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் அரசு சாா்பில் மானியமாக வழங்கப்படும்.

இத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்புவோா் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு உள்பட்டு இருக்க வேண்டும். இத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவோருக்கு நடப்பு ஆண்டில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவதிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ளது.

ஆா்வமுள்ள தொழில் முனைவோா் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் எ’ன்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விவரங்களை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரின் செல்லிடபேசி எண் 90800 78933-ல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT