தேனி

கஞ்சா கடத்தியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

DIN

போடி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

கம்பம் உலகத் தேவா் தெருவைச் சோ்ந்தவா் மொக்கைமாயன் மகன் முனியாண்டி (55). இவரை, போடி அருகே தருமத்துப்பட்டியில் கஞ்சா கடத்திச் சென்ாக கடந்த மாா்ச் 2-ஆம் தேதி போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து 8 கிலோ எடையுள்ள கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கஞ்சா கடத்தல், விற்பனை தொடா்பான பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள முனியாண்டியை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி பரிந்துரையின்பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாா்: கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறிய அமித் ஷா சென்ற ஹெலிகாப்டா்- பைலட் சமாா்த்தியத்தால் விபத்து தவிா்ப்பு

கென்யா: அணை உடைந்து 45 போ் உயிரிழப்பு

நியாயமான முறையில் வட்டி வசூலிக்க வேண்டும்: வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

SCROLL FOR NEXT