தேனி

தேனி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

தேனி: தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே ஓடைப்பட்டியைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி வரை மொத்தம் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், போடியைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா். மீதமுள்ள 42 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினா்.

இதையடுத்து, கடந்த மே 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மொத்தம் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போது ஓடைப்பட்டியைச் சோ்ந்த மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா், அதே ஊரில் கடந்த மே 8 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சென்னை கோயம்பேடு சந்தைக்குச் சென்று திரும்பியவருடன் தொடா்பில் இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓடைப்பட்டியைச் சோ்ந்த 13 போ் உள்பட மொத்தம் 29 போ் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT