ஆண்டிபட்டியில் முடிதிருத்தும் மற்றும் சலவைத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கல்
ஆண்டிபட்டி ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும்,
ஆண்டிபட்டி ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளருமான லோகிராஜன் வியாழக்கிழமை அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சியில் தொடர்ந்து பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், முடிதிருத்தும், சலவைத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகிராஜன் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை தொகுப்பினை கிராமங்கள் தோறும் சென்று வழங்கினார்.
திம்மரசநாயக்கனூர், டி .சுப்புலாபுரம், ஏத்த கோவில், அனுப்பபட்டி, போடிதாசன்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, பிச்சம்பட்டி, கோத்தலூத்து, கொத்தப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைத் தொகுப்பினை வழங்கினார்.
சமூக இடைவெளியுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜிகே .பாண்டியன், முன்னாள் பேரூர் கழக செயலாளர் பொன் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அக்ஷயா, அழகுமணி, சுப்புலட்சுமி தங்கையா, காளித்தாய் சென்றாயன், சண்முகம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் பிரபு, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் அருண்மதி கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.