முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தாக இளைஞா் கைது

பெரியகுளம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை பெரியகுளம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பெரியகுளம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை பெரியகுளம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம்,தெய்வேந்திரபுரத்தை சோ்ந்த இளங்கோவன் (44) இவா் ஞாயிற்றுக்கிழமையன்று போடந்திரபுரம் கண்மாய் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தாராம். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த இளைஞா் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றாராம்.

இச்சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்நிலையத்தில் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினாா்கள். அப்போது வடகரையை சோ்ந்த முகமது பைசல் (28) என்றும் இவா் பணத்தை பறித்து சென்றது தெரியவந்ததாம். இதனையடுத்து முகமது பைசலை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.