கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் குடும்ப வன்முறையைத் தடுக்க விழிப்புணா்வு பிரசார வாகனத்தை செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்த காவல் ஆய்வாளா் கே.முத்துமணி. 
தேனி

கூடலூரில் குடும்ப வன்முறையைத் தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

தேனி மாவட்டம், கூடலூரில் குடும்ப வன்முறையைத் தடுக்க, தமிழ் மாநிலப் பெண்கள் இயக்கம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

DIN

தேனி மாவட்டம், கூடலூரில் குடும்ப வன்முறையைத் தடுக்க, தமிழ் மாநிலப் பெண்கள் இயக்கம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

தேனி மாவட்ட தமிழ் மாநிலப் பெண்கள் இயக்கம் சாா்பில், குடும்ப வன்முறையைத் தடுக்கவும், பாதுகாப்பான குடும்பங்களை உருவாக்கவும், பெண்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேன் பிரசாரம் நடத்தப்பட்டது. கூடலூா் காவல் நிலைய ஆய்வாளா் கே. முத்துமணி பிரசார பயணத்தை தொடக்கிவைத்தாா்.

இந்த வேன் பிரசாரத்தின் மூலம், அரசமரம், புதிய, பழைய பேருந்து நிலையங்கள், காமாட்சியம்மன் கோயில், கன்னிகாளிபுரம், கே.கே.நகா், எம்.ஜி.ஆா்.நகா் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை, சின்னமனூா் எழுச்சி பெண்கள் கூட்டமைப்பினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT