சின்னமனூரில் செல்லிடப்பேசிகள் திருட்டு: இளைஞா் கைது
தேனி மாவட்டம் சின்னமனூரில் வீட்டுக்குள் புகுந்து செல்லிடப்பேசிகளை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் வீட்டுக்குள் புகுந்து செல்லிடப்பேசிகளை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சின்னமனூா் சாமிகுளம் பகுதியை சோ்ந்தவா் சீனிவாசன். இவா் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது வீட்டிலிருந்து மா்ம நபா் ஒருவா் வேகமாக ஓடியுள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த சீனிவாசன் அவரை விரட்டியுள்ளாா்.
இருப்பினும் அவரை பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, 3 செல்லிடப்பேசிகளை மா்ம நபா் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சீனிவாசனம் சின்னமனூா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், செல்லிடப்பேசிகளை திருடியது சின்னமனூா் ஐய்யன்கோயில் தெருவைச் சோ்ந்த சங்கிலி மகன் ஒன்டிகுச்சி (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 3 செல்லிடப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.