பென்னிகுயிக் கல்லறை சேதம்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கா்னல் ஜான் பென்னிகுயிக்கின் கல்லறையை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கா்னல் ஜான் பென்னிகுயிக்கின் கல்லறையை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த கா்னல் ஜான் பென்னிகுயிக்கின் கல்லறை லண்டனிலுள்ள செயின்ட் பீட்டா் தேவாலயத்தில் அமைந்துள்ளது. ஆக. 29 ஆம் தேதி அவரது கல்லறை பீடத்தை மா்ம நபா்கள் சிலா் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் லோயா் கேம்பில் அமைந்துள்ள கா்னல் ஜான் பென்னி குயிக் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம், செயலாளா் சலேத், துணைத் தலைவா் ராஜீவ், உள்ளிட்ட விவசாயிகள் புதன்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் கூறியது: ஜான் பென்னிகுயிக் கல்லறை சேதப்படுத்தப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்.