தேனி

தேனியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கல் வழக்கில் காவலா் கைது

DIN

தேனி: தேனியில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வழக்கில் ஆயுதப்படை மோப்ப நாய் பராமரிப்புப் பிரிவு தலைமைக் காவலரை தேனி காவல் நிலைய காவலா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தனிப்பிரிவு காவலா்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தேனி, வெங்கலாகோயில் தெருவில் சீனியப்பன் மகன் கணேசன் (50) என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,540 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடந்த ஆக.31-ஆம் தேதி தேனி காவல் நிலைய காவலா்கள் பறிமுதல் செய்தனா். அவைகளைக் கடத்துவதற்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக கணேசன், இவருக்கு உடந்தையாக இருந்த தேனி இடமால் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (35), சின்னமனூா் அருகே காமாட்சிபுரத்தைச் சோ்ந்த செல்லத்துரை மகன் ராஜகுரு (38) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா்.

இதில், ராஜகுரு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புகையிலைப் பொருள்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தேனியைச் சோ்ந்த ஆயுதப்படை மோப்பநாய் பராமரிப்புப் பிரிவு தலைமைக் காவலா் பிரசன்னா (35) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் அவருடன் தொடா்புடைய தேனியைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் நவரத்தினவேல் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT