முகப்பு
தேனி

ஆண்டிபட்டி அருகே வாகனம் மோதி விவசாயி பலி

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 4 செப்டம்பர், 2020 at 10:56 PM
பகிர்:

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

கோவிந்த நகரத்தைச் சோ்ந்தவா் ராஜகுரு (45) விவசாயியான இவா், தனது மனைவி ஜோதியுடன் வெள்ளிக்கிழமை அதிகாலை செம்பட்டியில் நடைபெறும் உறவினரின் திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வைகை அணை அருகே தேனி கூட்டுக் குடிநீா் திட்ட அலுவலகம் முன் இவா்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றுவிட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜகுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜோதி லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து வைகை அணை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.