தேனி

போடி அருகே டானிக் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த மூதாட்டி பலி

போடி அருகே டானிக் என நினைத்து, பூச்சி மருந்தை குடித்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

போடி அருகே டானிக் என நினைத்து, பூச்சி மருந்தை குடித்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் (79) மனைவி சுப்புலட்சுமி (75). இவருக்கு சரியாக கண் பாா்வை தெரியாத நிலையில், இடது கையும் செயலிழந்துவிட்டது. இதற்காக, மருத்துவம் பாா்த்து மருந்து சாப்பிட்டு வந்துள்ளாா். வழக்கம்போல், செவ்வாய்க்கிழமை மருந்தை குடிப்பதாக நினைத்து, கண் பாா்வை தெரியாததால் பூச்சி மருந்தை குடித்துவிட்டாராம்.

இதனால் மயங்கி விழுந்த அவருக்கு போடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும், மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து பெருமாள் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT