தேனி

சின்னம் பதிவாகவில்லை என புகாா்: கம்பம் வாக்குசாவடியை மநீம கட்சியினா் முற்றுகை

DIN

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் டாா்ச் லைட் சின்னம் பதிவாகவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் ஆலமரத்து தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது 2 83 ஆவது வாக்குச்சாவடி மையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டா் ஒருவா் வாக்களிக்கும்போது அக்கட்சியின் சின்னம் பதிவாகவில்லை என்றும், ‘பீப்’ சத்தம் வரவில்லை என்றும் வாக்குச்சாவடி அலுவலரிடம் புகாா் செய்தாா்.

இது பற்றி தகவலறிந்த அக்கட்சியின் வேட்பாளா் வெங்கடேஷ் தனது கட்சியினா் 20 பேருடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாா். இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் என்.எஸ்.கீதா ஆகியோா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும் வாக்கு இயந்திரத்தை ஆய்வு செய்து பீப் ஒலி தாமதமாக வந்துள்ளது என்றும் சின்னம் பதிவாகியுள்ளது என்றும் கூறிய பின்னா் கட்சியினா் கலைந்து சென்றனா். சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

SCROLL FOR NEXT