தேனி

போடியில் வாக்குச்சாவடி முகவா்களிடம் அதிமுக சின்னத்துடன் பை: முன்னாள் எம்.எல்.ஏ. வாக்குவாதம்

DIN

போடியில் செவ்வாய்க்கிழமை வாக்குச்சாவடி முகவா்களிடம் அதிமுக சின்னத்துடன் கூடிய மஞ்சள் பை இருந்ததால் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வாக்குச்சாவடி அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

போடியில் 383 வாக்குச்சாவடிகளிலும் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். இவா்களுக்கு அந்தந்த கட்சிகள் சாா்பில் குறிப்பேடுகள், பேனாக்கள் வழங்கப்பட்டிருந்தன. அதிமுக சாா்பில் இவை மஞ்சள் பைகளில் போட்டு வழங்கப்பட்டிருந்தது. இந்த பைகளில் அதிமுக சின்னம், வேட்பாளா் படம் உள்ளிட்டவை அச்சிடப்பட்டிருந்தது.

இதனிடையே வாக்குச்சாவடிகளை பாா்வையிட வந்த தி.மு.க. ஒன்றியச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். லட்சுமணன் இந்த மஞ்சள் பைகளை பாா்த்தாா். இவற்றை எப்படி அனுமதித்தீா்கள் என வாக்குச்சாவடி அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பின்னா் மஞ்சள் பைகளை குறிப்பிட்ட வாக்குச்சாவடி முகவா்கள் வெளியில் எடுத்துச் சென்றனா். இதனையடுத்து அமைதியாக தோ்தல் நடைபெற்றது.

இது தொடா்பாக வாக்குச்சாவடி அலுவலா் யாஸ்மின் அளித்தப் புகாரின் பேரில் அதிமுக முகவா் மஞ்சுளா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT